பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல், பள்ளி தாளாளர் உதயகுமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 18 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவரும் கலந்துகொண்டு பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாணவ மாணவிகள், ஆசிரியைகள்,

ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்துவந்தனர். பெற்றோர்களும் இந்த

பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சியான கோலாட்டம்,

கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியர்களுக்கான கோலம் வரைதல் போட்டி, பானை உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி நடனம் போன்ற போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோகள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.

