Skip to content

மரண பயம் காட்டிய எக்ஸ்பிரஸ் ரயில்: லாரி மீது மோதி நின்றதால் தப்பியது பல உயிர்

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில், கோண்டா – அசன்சோல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது நவாத் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

ரயில்வே கேட் மூடப்படாத நிலையிலும், ரயிலுக்கு உரிய சிக்னல் கிடைக்காத நிலையிலும் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாகனங்கள் மிக அருகில் ரயில் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தன. இருப்பினும், இன்ஜின் டிரைவர் துரிதமாகச் செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் வாகன ஓட்டிகள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர், லாரியை அகற்றி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!