Skip to content

போலி பாஸ்போர்ட் பயணி கைது.. திருச்சி க்ரைம்

ஆட்டோ திருடியவர் கைது

திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (24 ) இவர் நேற்று இரவு வீட்டின் அருகே இவரது ஆட்டோவை நிறுத்தி வைத்து உள்ளார். பின்னர் மறுநாள் பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ மாயமானது. இது குறித்து திருவரங்கம் போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ( 24 )என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மற்றும் அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் ( 19 ) மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட் பயணி கைது

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் முத்துக்கு குளத்தூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி (50) . என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மலேசியாவிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்ததால், தனது பாஸ்போர்ட்டில் போலி முத்திரையைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை போலி ஆவணங்களை சமர்ப்பித்து தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு

திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகர் அண்ணாதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி செல்வமணி (வயது 65)இவர் நேற்று திருச்சி தஞ்சை ரோடு அரியமங்கலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் திடீரென்று சாலையை கடக்கும் பொழுது அந்த வழியாக எதிரே வந்த இருசக்கர வாகனம் செல்வமணி மீது மோதியது இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வமணி ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்து வாலிபர் சாவு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை அருகில் சுமார் 32 வயது மதிப்பு தக்க வாலிபர் ஒருவர் கடந்த 5ந்தேதி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வாலிபர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.இதை அடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் சிவா (வயது 32) என்பது மட்டும் தெரிய வந்தது எந்த ஊரை சேர்ந்தவர். எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை.

மூச்சுத் திணறி பெண் சாவு

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவரது மகள் துர்கா தேவி (வயது 39 )இவர் நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று வீட்டில் இருக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆபத்தான நிலையில் துர்கா தேவியை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் துர்கா தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார் இந்த சம்பவம் குறித்து எசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!