புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி ( 36 ) இவர் நேற்று முன்தினம் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் கடந்த 1998-ம் ஆண்டு இலங்கை கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு குடி பெயர்ந்துள்ளார். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் நிஷாலினியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் 2 பேர் கைது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எம்பலூர் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52).இவர் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனையில் அவர் பிறந்த தேதி மற்றும் முகவரியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிந்தது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சேர்ந்தவர் அப்துல் ரபீக் (49). இவர் துபாய் செல்ல திருச்சி ஏர்போர்ட் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனையில் அவர் பிறந்த தேதி, பிறந்த ஊர் ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிந்தது. இரண்டு பேரையும் ஏர்போர்ட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.