பிரபல அஸ்ஸாமி நடிகை நந்தினி காஷ்யப்.இவர் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி ஓட்டிவந்த கார் Samiul Haque (21) என்னும் மாணவர் மீது மோதியுள்ளது.கார் மோதியதும் காரை நிறுத்தாமல் சென்ற நந்தினி, தனது வீட்டுக்குச் சென்று காரை மறைத்துவைக்க முயன்றுள்ளார். அதை வீடியோ எடுத்த ஒருவரையும் நந்தினி தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த Samiul, Gauhati மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று, அதாவது, ஜூலை மாதம் 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து காரணமாக அவரது தலையில் பலத்த காயங்கள் மற்றும் இரு கால்களிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இந்திய நடிகை நந்தினி காஷ்யப் இன்று கௌகாத்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நந்தினி ஓட்டி வந்ததாகக் கூறப்படும் கார் மோதியதில் 21 வயது மாணவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.