தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியh தெரிவித்துள்ளார்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 28.05.2025 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.