Skip to content

புதுகை அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை குறித்த களப்பயணம்

தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக 2025-2026 ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள அரசு பள்ளிகளின்  மாணவர்களுக்கு ஒரு நாள் இயற்கை  முகாம் காடுகள் மற்றும்  வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை  உணர்த்த நேரடி கற்றல் காடுகளின் நடைபயணம்  களப்பயணம்  மற்றும் கலந்துரையாடல் மூலம் இயற்கையை அறிந்து கொள்ள  வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி,  புதுக்கோட்டை  இராஜகோபாலபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை பாலன் நகர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளை சேர்ந்த 60 மாணவர்கள் ஒரு நாள் இயற்கை முகாம் களப்பயணமாக திருச்சி மாவட்ட பறவைகள் பூங்கா, சித்தன்னவாசல் ஆகிய இடங்களுக்கு செல்லும் தொடக்க நிகழ்வு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை  மாவட்ட வன அலுவலர் சோ.கணேசலிங்கம், முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி, வனச்சரகர் ரவி, வனவர் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரக பசுமைத்தோழர் கமலி , பொறுப்பாசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!