Skip to content

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026ன் இறுதி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு. அருணா வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், நேர்முக உதவியாளர் திருமால், கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ. செந்தமிழ் குமார், திமுக. சார்பில் லியாகத் அலி, ராஜேஷ், அதிமுக. சார்பில் சேட், பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!