திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ராயல் ரோடில் சரவணன் என்பவர் ராஜ் ஹாட் சிக்கன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல இன்று உணவகம் செய்யப்பட்டு வந்தது மாலை 5.30 மணி அளவில் மின் கசிவு காரணமாக உணவகத்தில் உள்ள சமையல் அறையில் தீப்பற்றி எரிந்தது இந்த தீயானது பரவத் துவங்கியது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் தீய அணைக்க முற்பட்டனர் மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் தொடர்ந்து திருச்சி மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இத்தீயின் காரணமாக உணவகத்தில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் சமையல் உபகரணம் தீக்கிரையானது. இது தொடர்பாக கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏற்பட்ட உணவகம் எதிரே மிலிட்டரி கேன்டீன் உள்ளது அந்த கேண்டினில் உள்ள ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மிலிட்டரி கேண்டில் உள்ள தீ அணைப்பு உபகரணத்தை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது