Skip to content

திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம்  திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், தீபமலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மலையின் மையப்பகுதியில் உள்ள ஏழு சுனை என்ற பகுதியில் தீ பரவியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!