திருச்சி காஜாப்பேட்டை அருகே பாதாள சாக்கடை பணிக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களில் இன்று திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருச்சி தீயணைப்பு படை வீரர்கள் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.