கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நித்தின் இவரது மனைவி மாலதி பிரியா விவசாயத் தோட்டத்து வீட்டின் முன் பகுதியில் பரன் அமைத்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர் . நேற்று இரவு வழக்கம் போல வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஆட்டுக்குட்டிகளின் அலறல் சட்டம் கேட்டுள்ளது வெளியில் வந்து பார்த்தபோது பரண் மற்றும் ஆடுகள் தீயில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உத

வியுடன் தீயை அணைக்க முற்பட்டனர்
மளமளவென பரவிய தீயில் கருகி 30 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் நித்தின், மாலதி பிரியாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது . இச்சம்பவம் குறித்து நெகமம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிவிவந்துள்ளது. ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்வதாரத்தை பெற்று வந்த நிலையில் விவசாயி வளர்த்து வந்த 30 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

