கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ராகவன் வீதியில் மெத்தை தயாரிக்கும் பஞ்ச குடோன் உள்ளது. அதில் மெத்தை தயாரிக்கும் மூலப் பொருட்களான நூல், பஞ்சுகள் இருந்தது. அந்த குடோன் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. அதன் அருகே பந்தல் அமைக்கும் கடை மற்றும் சாய் ராம் கேட்டரிங் உள்ளது. இதில் சுமார் 9 மணி அளவில், பஞ்ச குடோனில் திடீரன தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இந்நிலையில் அருகில் இருந்த பந்தல் அலங்கார கடை முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து ரத்தினபுரி காவல்துறை மற்றும் கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி முழுதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அனைத்து வருகின்றனர். இதில், தீ விபத்தால் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. மின்கசிவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் விபத்து ஏற்பட்டதா என ரத்தினபுரி காவல் துறையினர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
