Skip to content

கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

  • by Authour
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள 70 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் மனநலம் குன்றிய நபர் ஒருவர் தவறி விழுந்து தண்ணீரின் மேல் உள்ள பாறையில் அமர்ந்துள்ளார். விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி கிணற்றில் ஒருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி மனநலம் குன்றிய நபரை பாதுகாப்பாக உயிருடன் மீட்டு அரவக்குறிச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
error: Content is protected !!