கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள அதிரபள்ளி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு. வால்பாறை-பிப்ரவரி-26. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சியாக இப்பகுதிக்கு தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவி அழகை கண்டு ரசிக்கின்றனர் இப்பகுதியில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது

குறிப்பாக நடிகர் கமல் நடிப்பில் உருவான புன்னகை மன்னன்,மருதநாயகம் படப்பிடிப்பு இப்பகுதியில் நடைபெற்றது மேலும் தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வறுத்து அதிகமாக உள்ளது சுற்றுலா பயணிகள் அருவி அருகே செல்லும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தகவல் அறிந்த

வனத்துறையினர் மற்றும் மீட்பு குழு விரைந்து சென்று 15க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன மேலும் தண்ணீர் அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

