போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் சாலையை தொடங்குவதன் மூலம் 600 நேரடி வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா , “தமிழ்நாட்டை நோக்கி ஒவ்வொரு நாளும் பல நிறுவனங்கள் வருவதாகவும், படித்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் அற்புதமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. மேலும், போர்டு நிறுவனம் மீண்டும் தன்னுடைய தொழிற்சாலையை தொடங்கும் என உறுதியளித்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. நீண்ட நாள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு geo political situation-லிலும் போர்டு நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் 600 நேரடி வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை மிகப்பெரிய வெற்றியாக தமிழ்நாடு கருத்துகிறது” என்றார்.

