இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச. விளையாட்டு வீரரான இவர், இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இந்நிலையில் யோஷித ராஜபக்ச சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்புவில் உள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திலும் இது தொடர்பாக யோஷித ராஜபக்ச விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் யோஷித ராஜபக்சவை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாந்தோட்டை மாவட்டம் பெலியத்தில் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.