திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டிஆர் பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. நுரையீரல் தொற்று காரணமாக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். இன்று மாலை தி.நகரில் உள்ள இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்
- by Authour
