நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1.5 ல ட்சம் வரையிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். 2030க்குள் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும் நோக்கத்துடன் திட்டம் செயல்படுத்தபட உள்ளது என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…
- by Authour
