தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்,45., இவர் மதுக்கூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசி, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், வெளியிட்டார்.
இந்த வீடியோ குறித்து, பேராவூரணி வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ வாட்ஸ் அப் பதிவு ஆதாரங்களுடன் திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீசார், அவதூறு பேச்சு பேசிய சிவக்குமார் மீது ஐந்து பிரிவுகளில், வழக்கு பதிவு செய்து , நேற்று போலீசார் சிவக்குமாரை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.