Skip to content

5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

முதல்-அமைச்சர், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக (i) ப . நடராஜன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, விழுப்புரம் மண்டலம், (ii) மா.சத்யாநந்தன், காவல் உதவி ஆய்வாளர், ஆரோவில் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், (iii) சு. மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளர், சின்னசேலம் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம், (iv) க. நடராஜன், காவல் உதவி ஆய்வாளர், புத்தூர் காவல் நிலையம், கடலூர் மாவட்டம் மற்றும் (v) வா. பெ. கண்ணன், தலைமைக் காவலர்-1403, மத்திய நுண்ணறிவுப் பிரிவு, சேலம் மாவட்டம், ஆகியோருக்கு 2025-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்விருது, முதல்-அமைச்சரால் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!