Skip to content

கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70 ஆயிரம் மோசடி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது 39) இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய வாட்ஸ் அப் குழுவில் திருச்சி கம்பரசம்பேட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அறிமுகமாகிறார்.தற்சமயம் அவர் உறையூரில் தங்கி உள்ளனர் இந்நிலையில் அவர் தனக்கு பேக்கரி விஷயங்கள் தொடர்பாக எல்லாம் தெரியும் என்றும் ,பேக்கரி இயந்திரம் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சிக்கந்தர் பாஷாவிடம் ரூபாய் 70 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் பெற்றுக் கொண்டார்.பிறகு சிறிது நாட்களில் எந்திரத்தையும் வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை. இதைத்தொடர்ந்து சிக்கந்தர் பாஷா தன்னை அவர் ஏமாற்றி விட்டதாக எண்ணி உறையூர் குற்றப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் முகமது கைது செய்துள்ளனர்.

டூவீலர்களை சேதப்படுத்திய 2 பேர்

திருச்சி கீழ சிந்தாமணி புது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28)சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்பொழுது சிந்தாமணி பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது 21) புதுவை நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 26) ஆகிய இரண்டு பேரும் தெருவில் நடந்து செல்லும் போது அங்கு இருந்த இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர்.இதனை பார்த்த விக்னேஷ் அவர்களிடம் கேட்டபோது மனோஜ், விக்னேஸ்வரன் இருவரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் 3 பேரும் தாக்கிக் கொண்டு காயமடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கோட்டை போலீஸில் புகார் கொடுத்துள்ளார் . இப்புகாரின் பேரில் போலீசார் மனோஜ், விக்னேஸ்வரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 2 பேரம் காயத்துடன் திருச்சி அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

திருச்சி பொன்மலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் 13 வது கிராஸ் தெருவில் தனி படையுடன் சென்றனர்.அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் போலீசார் வருவதை பார்த்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதில் இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர்.நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்த அறிவழகன் (வயது 38)
அரியமங்கலம் பகுதியை சேர்ந்த நிக்சன்,மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 44) கணபதி நகர் ஜெயஸ்ரீ (வயது 21) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அரியமங்கலம் அம்மன் குளம் பகுதியை சேர்ந்த பாட்ஷா (வயது 24) ஆசை முத்து (வயது 26) ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
இவர்கள் இரண்டு பேரும் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தள்ளு வண்டியில் வைத்து மது விற்பனை ..2 பேர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று பட்டப்பகலில் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக,சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேவியர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது புள்ளம்பாடி வாய்க்கால் பகுதியில் ராபர்ட், முத்தமிழ்செல்வன் ஆகியோர் தள்ளு வண்டியில் சட்டத்திற்கு விரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன்அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!