தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பெண் உள்பட 2 பயணிகளின் உடைமைகளில் 12 கிலோ எடைகொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 12 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2 பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.