Skip to content

மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

கடலூர், வேப்பூர் அருகே விவசாய நிலத்தில் பணிபுரிந்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருடைய விவசாய நிலத்தில் நேற்று மாலை கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி, கனிதா, தவமணி ஆகிய ஐந்து பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென்று இடியுடன் கூடிய மழை பெய்தது அப்பொழுது வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது  மின்னல் தாக்கியதில் ராஜேஸ்வரி, பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கின்ற ராஜேஸ்வரி, கனிதா, ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தவமணி பலத்த காயம் ஏற்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!