Skip to content

கோவா கோயில் திருவிழா… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவாவில் உள்ள ஷிர்காவோவில் நடந்த ஸ்ரீ லைராய் ஜத்ரா திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவா மருத்துவ கல்லூரி (ஜிஎம்சி) மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வடக்கு கோவா மாவட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து ஆய்வு செய்தார்.

error: Content is protected !!