Skip to content

தரமற்ற தங்கநகை… வியாபாரிமீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்..

மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் சிவாஜி மனைவி ராசாத்தி(50), இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்துள்ளார். மயிலாடுதுறை ஆர்.வி.க..ஜுவல்லரியில் 2 கிராம் முதல் 6 கிராம் வரை மோதிரம், மூக்குத்தி, போன்ற நகைகளை ஏஜன்ட் சுகன்யா என்பவர்மூலம் வாரா வாரம் ரூ.5 ஆயிரம் செலுத்தி 2022ஆம் ஆண்டுமுதல் 2024 ஆண்டுவரை தவணைமுறையில் வாங்கி வந்துள்ளார்.,

வாரா வாரம் தொகையை சுகண்யாவிடம் ஜிபே மூலம் அனுப்பி வந்துள்ளார். 10 பவுன் நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வாங்கிய நகைவகைகள், தரம் மற்றும் அதற்கான பில் அளிக்கப்படவில்லை. தனது நகைகளை அடகு வைத்தபோது அவைகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது,
இதுகுறித்து ஜுவல்லரியில் கேட்டபோது சரியான பதில் இல்லை, ஏஜன்ட்டை கேட்டுக்கொள் என்று கூறியதால் மயிலாடுதுறை எஸ்பி, டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் என பல்வேறு இடங்களில் ஏறி இறங்கியும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்பதால் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வளர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ராசாத்தி புகாரை அளித்து . ஜுவல்லரி நிறுவனத்தினர் தவணை முறையில் விற்ற நகைகள், தரம் மற்றும் விற்பனைக்கான ரசீதையும் அளிக்கவில்லை, ஆகவே போலி நகைகளை ரசீது இன்றி விற்பனைசெய்த ஏமாற்றிய நிறுவனத்தின்மீதும் அதற்கு உடந்தையாக இருநதவர்கள்மீதும் நடவடிக்கை எடுத்து தனது நகைகளை பெற்றுத்தரவும் கோரியுள்ளார்.

error: Content is protected !!