தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை ரூ.76,280-க்கு விற்பனையானது.
ஆகஸ்ட் 30 பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் விலை ரூ.77,000 நெருங்கியுள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று(செப்.1) சவரனுக்கு ₹680 அதிகரித்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,705-க்கும், சவரன் ₹77,640-க்கும் விற்பனையாகிறது.