Skip to content

மீண்டும் தங்கம் விலை புது உச்சம்..

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 82,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை ₹83 ஆயிரத்தை நெருங்குவது இதுவே முதல்முறை. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 148 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!