நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள், தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 15,025 ரூபாய்க்கும், சவரன், 1,20,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 375 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் குறைந்து, 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் சரிவடைந்து, 1,19,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதேசமயம், வெள்ளி கிராமுக்கு, 12 ரூபாய் உயர்ந்து, 387 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 12,000 ரூபாய் அதிகரித்து, 3.87 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அந்த வகையில், இன்று (ஜன.28) தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ரூ.15,330க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து ரூ.1,22,640க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.400க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.13,000 உயர்ந்து ரூ.4,00,000க்கும் விற்பனையாகிறது.

