Skip to content

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை.. 

திருச்சி கே கே நகர் பகுதியில் வங்கி காச்சாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
திருச்சி கே கே நகர் உடையான் பட்டியை சேர்ந்தவர் தாமரைச்செல்வி ( 42 ). அப்பகுதியில் உள்ள வங்கியில் காசாளராக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் நேற்று இவர் தன் வீட்டை பூட்டி விட்டு காலை பணிக்கு சென்றார், அன்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த 10 கிராம் தங்க காசு 100 கிராம் வெள்ளி டம்ளர் மற்றும் 100 கிராம் வெள்ளி குங்குமச்சிமிழ் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்து முதியவர் சாவு

திருச்சியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்.
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட கிராம நிர்வாக அலுவலர் கௌதம் பாபு கடந்த தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது வழிவிடு முருகன் கோயில் அருகே அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தது தெரிய வந்தது உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர் நேற்று உயிரிழந்தார் இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார் அவரது உறவினர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

திருச்சி தென்னூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர் அப்பாஸ் (31. ) இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
தினசரி குடித்துவிட்டு அவரது வீட்டின் பால்கனியில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த நிலையில் அவர் தென்னூர் குப்பாங்குளம் சேவை சாலை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூச்சுத் திணறி டூவீலர் மெக்கானிக் சாவு

திருச்சியில் பைக் மெக்கானிக் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரிக்கின்றனர்.
திருச்சி தென்னூர் சவேரியார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் யகாஷ் (21 )இவர் அதே பகுதியில் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். மேலும் இவர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார். அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 கஞ்சா விற்ற ரவுடி உள்பட 3 பேர் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்.
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி மயானம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர் அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர் இதில் அவர்கள் அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி கதிர் ( 25, ) சபரிநாதன் (19), சிக்கந்தர் பாஷா (21) என்பதும் அவர்கள் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து இந்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய விக்கி ( 19 ) மற்றும் தீபக் (19) ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து ரூ. 10,000 மதிப்புள்ள 1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!