தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துர்கா திருமணம் கடந்த 20.8.1975ல் நடந்தது. திருமணம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி இன்று திருமண பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் இன்று காலை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்
திருமண பொன்விழாவையொட்டி முதல்வருக்கு அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த பொன்விழாவையொட்டி துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், விடுத்துள்ள செய்தியில், அம்மா, அப்பா இன்றுபோல என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்பாவுக்கு நான் செல்ல பிள்ளை, அம்மா என்றால் கண்டிப்பு என்று கூறி உள்ளார்.