சட்டப்பேரவையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
வரும் டிச., 15ஆம் தேதி முதல் விடுபட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மகளிருக்கும் தற்போது வரை ரூ.26ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக அளவிர் மகளிர் பயனடைய வேண்டும் என்று கருதி நிபந்தனைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.மகளிர் உரிமைத் தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தியதால் புதியதாக பல மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றனர்.
மகளிர் உரிமைத்தொகை கோரி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பரிசீலனை செய்யப்பட்டு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார்.