கொரோனா வைரஸால் கூகுள் நிறுவனம் திடீர் மூடல்…

149
Spread the love
கொரோனா வைரஸ் அங்க சுத்தி, சுத்தி கூகுளையும் மிரள வைத்திருக்கிறது. சீனாவில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டு விட்டது. சீனாவின் உஹான் பகுதியிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 3000க்கும் மேற்பட்ட மக்களை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 150ஐ எட்டும் என்று அஞ்சப்படுகிறது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. கல்வி நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து மோசமான நிலை காணப்படுவதால் அலுவலகங்களும் இயங்கவில்லை. அதிலும் முக்கியமாக உலகம் எங்கும் பரவி கிடக்கும் கூகுள் நிறுவனமும் தங்கள் சீன கிளை அலுவலகங்களை மூடியுள்ளது. ஹாங்காங், தைவான் அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கூறப்பட்டுள்ளது.14 நாட்கள் இப்படி இருக்கவேண்டும் கூகுள் நிறுவனம் என அறிவித்துள்ளது.

தமது ஊழியர்கள் யாரையும் சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய கூகுள், சீனாவில் இருந்து கூகுள் நிறுவன ஊழியர்கள் யாரும் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY