அரசு போக்குவரத்து கழக பழனி பனிமனையில் இருந்து TN..38 என் 3225 என்ற பதிவு எண் கொண்ட
பேருந்து பழனியில் இருந்து கோவை நோக்கி சென்றது ஓட்டுநர் ஆர்.பழனி நடத்துனர் எம்.சுரேஷ் ஆகியோருடன் பேருந்தில் 70 கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து கோவைக்கு பயணிகள் அதிக அளவில் செல்வதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது இந்நிலையில் பொள்ளாச்சி உடுமலை சாலையில் திப்பம்பட்டி அருகே பேருந்தின் டயர் அச்சு வெடித்து விபத்துக்குள்ளானது. பேருந்தின் முன் பகுதி சென்ற மீடியன் மீது ஏறி நின்றது
இதில் பேருந்தின் கீழ் பகுதி பலத்த சேதம் அடைந்தது சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது பலமாக மோதியதில் தடுப்பு சுவர் கற்கள் பட்டு எதிரே கோவையில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து டிஎன்ஏ 38 என் 3298 சேதமடைந்தது. இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோமங்கலம் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர் பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.

