Skip to content

பொள்ளாச்சி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.9% தேர்ச்சி

பொள்ளாச்சி அருகே ஆனைமலை விஆர்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் பத்தாம் வகுப்பில் முதலிடம், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளிக்காயின் பரிசளித்த பேரூராட்சித் தலைவர் . பொள்ளாச்சி-மே-16 பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் செயல்பட்டு வரும் வி ஆர் டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1268 மாணவிகள் படித்து வருகின்றனர் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 94 சதவீதம் இருந்தது இந்த வருடம் 11வது எழுதிய மாணவிகள் 244 பேர் தேர்வு எழுதி 241 தேர்வு பெற்றுள்ளனர், பத்தாம் வகுப்பு தேர்வு மாணவிகள் எழுதினர் இதில் 188 பேர் தேர்வு பெற்றுள்ளனர்50-க்கும் மேற்பட்டோர் நானூறுக்கு மேல் மதிப்பெண் எடுத்து மூன்று மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர் இதில் முதல் மாணவி ஜீவிகா (490) இரண்டாம் இடம் பெற்ற மாணவி பிரியா மகேஸ்வரி(489) மூன்றாம் இடம் பிடித்த மாணவி தர்ஷனா (481) இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிக் கல்வித் துறை மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்தனர் முதல் இடம் பிடித்த மாணவி கூறுகையில் தான் யுபிஎஸ் எக்ஸாம் எழுதி மாநிலத்தில் முதல் மாணவியாக வரவேண்டும் என லட்சியம் என தெரிவித்தார் இதை அடுத்து ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் , தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து வெள்ளி காயின் வழங்கினார் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளையாட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.9% தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
error: Content is protected !!