Skip to content

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யை,பதவி நீக்கம் செய்ய, குடியரசு தலைவரை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் க.வரதராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங்கிரஸ் கட்சி ,

அகில இந்திய உறுப்பினர் வழக்கறிஞர் தமிழ்செல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!