Skip to content

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 3 நாட்கள் பயணமாக இன்று காலை டில்லி விரைந்தார். அவர் வரும் 21ம் தேதி  சென்னை திரும்புகிறார்.  டில்லியில் அழைப்பின் பேரில்  கவர்னர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வர்  வரும் 22ம் தேதி தென் மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட்டத்தை சென்னையில்  கூட்டி உள்ளார்.  அத்துடன்  மும்மொழி கொள்கை,  தொகுதி மறு சீரமைப்பு, நிதி ஒதுக்கீடு விவகாரம் போன்றவற்றில்  நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் மத்திய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்து நெருக்கடி கொடுக்கிறார்கள். இதற்கு  திமுக அரசுக்கு  பதிலடி கொடுக்கும் வகையில் கவர்னர் மூலம் அடுத்த கட்ட நடிவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பேரில் அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக  பேசப்படுகிறது.

 

 

error: Content is protected !!