குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., சார்பில், ஜெயக்குமார், பாலகங்கா, பா.ஜ., சார்பில் கரு. நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். விழாவில், மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த விருந்தை தி.மு.க., கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளனர்.