சென்னை 2025 சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் (Quantbox Chennai Grand Masters 2025) ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இது இந்தியாவின் மிக உயர்ந்த மட்டத்திலான கிளாசிக்கல் செஸ் போட்டியாகும், இதை MGD1 மற்றும் ChessBase India அமைப்புகள் நடத்தின.
இந்தத் தொடர் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளாக நடைபெற்றது, ஒவ்வொரு பிரிவிலும் 10 வீரர்கள் ஒற்றை ரவுண்ட்-ராபின் முறையில் போட்டியிட்டனர். மொத்தப் பரிசுத் தொகை 1 கோடி ரூபாய் ஆகும். இந்த தொடரில், சேலஞ்சர்ஸ் பிரிவில் சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரனேஷ்.
அவர் 8 சுற்றுகளில் 6.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும், மாஸ்டர்ஸ் பிரிவில் ஜெர்மனியின் வின்செண்ட் கீமர் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 7 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும், 2026 சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்த சாதனை தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்தது.