Skip to content

குரூப் 4 விடைத்தாள் சர்ச்சை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!

  • by Authour

குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்பப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  தேர்வுகள் நடத்தி ஆட்களை தேர்வு செய்து நிரப்பி வருகிறது.  அந்தவகையில் வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில்,  அதில் சுமார் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வெழுதியிருந்தனர்.

இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள் கட்டுகள் உரிய பாதுகப்பு இல்லாமலும், விடைத்தாள்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டிகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டும் , முறையாக சீலிடப்படாமலும் இருந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,  பொதுவாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விசைத்தாள்கள் முறையாக அட்டைப்பேட்டிகளில் வைத்து சீலிடப்படு சென்னைக்கு அனுப்பப்படும். ஆனால் உரிய பாதுகாப்பின்றி அனுப்பப்பட்டதாக வெளியான புகைப்படங்கள் தேர்வர்களை அதிர்க்குள்ளாக்கியது.

இதுதொடர்பாக முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.  இந்நிலையில் குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தியை டி.என்.பி.எஸ்.சி மறுத்துள்ளது.  இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “குரூப் 4 விடைத்தாள்கள் டிரங்க் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்படும். சாதாரணை அட்டைப் பெட்டிகளில் எடுத்துவரப்படாது. விடைத்தாள் தவிர்த்து மற்ற தேர்வு ஆவணங்கள் மட்டுமே அட்டைப் பெட்டியில் அனுப்பப்படும். ஆவணங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் ,  குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14ம் தேதி சென்னை கொண்டு வரப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். மேலு,  கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார் கைகளுக்கு செல்லாது” என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!