டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப் 4 தேர்வு நாளை(சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு ஆஃப்லைன் முறையில், அதாவது OMR தாளில் நடத்தப்படும். நடைபெறுகிறது. கிராம அதிகாரி, இளநிலை உதவியாளர்கள், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 3,935 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடக்கிறது. 13,89,738 பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். அதாவது ஒரு இடத்திற்கு 353 பேர் என்ற விகிதத்தில் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வுகள் நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.