Skip to content

2 மாதத்தில் குரூப்1 ரிசல்ட்- TNPSC தலைவர் பேட்டி

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான  தோ்வு நேற்று நடந்தது.  அத்துடன் குரூப் 1 ஏவில் உள்ள  2 உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கும் தேர்வு நடந்தது.

குரூப் 1 முதல்நிலை தேர்வு எழுத 2 லட்சத்து 49,294 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 74.66 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது, 1 லட்சத்து 86,128 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். வந்துள்ளனர். 25.34 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதாவது 63 ஆயிரத்து 166 பேர்தேர்வு எழுத வரவில்லை.

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:  ‘குரூப் 1 தேர்வுக்கான ரிசல்ட் 2 மாதத்தில் வெளியிடப்படும். மெயின் தேர்வு அதில் இருந்து 3 மாதத்திற்குள் நடைபெறும்’

இவ்வாறு அவர் கூறினார்.

 

error: Content is protected !!