Skip to content

பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா… 75 அடி கொடி மரம் ஏற்றம்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வருவார் அந்த வகையில் குண்டம் திருவிழா 18 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான வரும் பின் 12ம் தேதி நள்ளிரவில் மயான பூஜை நடைபெறும் , 14ஆம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது இந்த திருவிழாவை ஒட்டி கடந்த சனிக்கிழமை அன்று சர்க்கார்பதிவிலிருந்து 75 அடி உயரம் கொண்ட கொடி மரம் மாசாணியம்மன் முறை தாரர்கள் மூலம் கோவிலுக்கு வந்தடைந்தது இதனைத்தொடர்ந்து இன்று காலை உப்பாறு

கரையோரம் பூஜைகள் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மாசாணி அம்மன் கோவில் வந்தடைந்தது பின்னர் பக்தர்கள் மாசாணி தாயே போற்றி என்ற கோஷங்கள் முழங்க மேள தாளங்களுடன் கொண்டுவரப்பட்டு கொடி மரம் ஏற்றப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர், இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி , ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் சாந்தலிங்க குமார், தி.மு.க. தெற்க்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் , அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செ.ம.வேலுச்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, ஆனைமலை திமுக நகர செயலாளர் டாக்டர் செந்தில்குமார் , ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன்,முறைதாரர்கள் மனோகரன், கிருஷ்ணன், அறங்காவலர்கள், ஆனைமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீமதி,ஆனைமலை காவல் நிலையா ஆய்வாளர் தாமே தரன், மகளிர் காவல்நிலையா ஆய்வாளர் மீனா பிரியா மற்றும் பக்தர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்,

error: Content is protected !!