தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சார்பில் தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு ஹசன் மவுலானா நிறுத்தப்பட்ட நிலையில் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வானார். தமிழ்நாடு, கேரளாவை உள்ளடக்கிய ஹஜ் கமிட்டியின் 6வது மண்டலத்திற்கான உறுப்பினராக ஹசன் மௌலானா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
