Skip to content

இந்தியாவை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்- பிரதமர் மோடியை சாடிய ராகுல்

அமெரிக்க அரசின் கடும் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக மக்களவையில் மீண்டும் இந்தியா – சீனா விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டதாக கூறினார். அதில், “அமெரிக்காவின் கடும் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.

அதானி மீது அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட்டுள்ளார். உழைத்து மக்கள் ஈட்டும் பணத்தை மோடி அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு விற்றுவிட்டார். நாட்டின் நலனில் பிரதமர் மோடி சமரசம் செய்துவிட்டார். அவர் அமெரிக்காவிடம் நாட்டை விற்றுவிட்டார். எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரத்தில் என்ற நடந்தது என்பதை அறிய நாடு விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதற்றம் அடைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரைக் கூட நாடாளுமன்றத்தில் பேச விடுவது இல்லை. நாட்டின் முக்கிய பிரச்சனை குறித்து அவையில் பேச அனுமதி மறுப்பது ஏன்?.சீன விவகாரம் குறித்து பேசிய நான் ஏன் தடுக்கப்பட வேண்டும்,” இவ்வாறு பேசினார்.

error: Content is protected !!