கரூர் துயரச் சம்பவம்-சிபிஐ விசாரணைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 12க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாத முதல் சிபிஐ அதிகாரிகள் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள், பணியில் இருந்த காவலர்கள், இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர், காயம் அடைந்த குடும்பத்தினர், மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தமிழக வெற்றிக்கழக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பல்வேறு தரப்பின இடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று சிபிஐ அலுவலகத்தில் நான்கு காவல்துறையினர் மற்றும் 8-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் என 12க்கும் மேற்பட்டோர் இன்று விசாரணைக்கு ஆஜராகி ஒரு சிலர் விளக்கம் அளித்துவிட்டு விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மீண்டும் சிபிஐ விசாரணைக்காக ஆஜராக கூறி சமன் அனுப்பிய உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

