பாமகவில் மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் கட்சியின் செயல் தலைவர் ஜி.கே. மணியும், சேலம்மேற்கு எம்.எல்.ஏ. அருளும் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக உள்ளனர். மற்ற 3 பேரும் அன்புமணியுடன் உள்ளனர்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாசின் ஆதவு எம்.எல்.ஏக்களான செயல் தலைவர் ஜி.கே. மணி, சேலம் அருள் ஆகியோருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. ஜி.கே. மணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அருள் எம்.எல்.ஏ. ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அன்புமணி மாவட்ட வாரியாக பாமக பொதுக்குழுவை கூட்டி வருகிறார். சேலம், தர்மபுரி மாவட்ட பொதுக்குழுவை அன்புமணி கூட்டி உள்ள நிலையில் இவர்கள் இருவரும் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.