கரூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கோடை வெயில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு திடீரென கருமயங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியான பள்ளப்பட்டி, ஈசநத்தம், லிங்கம் நாயக்கன்பட்டி, தடா கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…
- by Authour
