Skip to content

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

கோவை, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் .

தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை அரசு கலை கல்லூரி முன்பு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சக்திவேல் துவக்கி வைத்தார், பேரணி மகாலிங்கபுரம் புதூர் ரோடு பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வழியாக பேரணி சென்றது பேரணியில் பங்குபெற்ற மாணவ மாணவிகள் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனங்களில் செல்லும் பொழுது செல் போன் பேச கூடாது, காரில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிய வேண்டும் , மது போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது எனவும்

வாகனங்களின் ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும், அதி வேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது, போக்குவரத்து விதிமுறைகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் நம் குடும்பத்தார் மற்றும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இதனை அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, இதில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரியாஸ்கான், சுந்தர்ராஜ், முதல் நிலைக் காவலர் சசிகுமார் , போக்குவரத்து காவலர்கள் பிரபு, சசிகுமார் ,பவிதா, காளிமுத்து உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!