கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பக்கத்துக்குட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதியில் உள்ள எருமைப்பாறை, கூமாட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பு, கோழிகமுத்தி யானை பாகங்கள் வசிக்கும் பதவிகளுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டது மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதி ரூபாய் 4,95,000 மற்றும் தாட்கோ மூலம் ரூபாய் 5,11,000 எனவும் 302 சதுரடி அடி அளவில் வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டது சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் பல வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அடைந்தது ஆனால் பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்களாகியும் இன்று முழுமையாக அடையாததால் மலைவாழ் மக்கள் அவர்களது உறவினர்கள் வீட்டில் எட்டுக்கும் மேற்பட்டோர் தங்கி வசித்து வருகின்றனர்.
முதலில் எடுத்த ஒப்பந்ததாரர் முறையாக பணி செய்யாததால் இரண்டாவதாக பணி எடுத்த ஒப்பந்ததாரர் வீடுகள் கட்டும் பணிகள் தாமதப்படுத்தி வருகின்றனர் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணி மேற்கொள்ளாமல் கட்டிட பணியாளர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்நிலையில் டாப்ஸ்லிப் வனச்சரகர் வெங்கடேஷ் பலமுறை ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தியும் பணிகள் முடியவில்லை இதை அடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு. சுப்பிரமணியம் டாப்சிலிப் பகுதிக்கு மருத்துவமனை ஆய்வுக்கு சென்று திரும்பும் பொழுது மலைவாழ் மக்கள் ஒன்று கூடி அமைச்சர் காரின் முன் நிண்டனர் அமைச்சர் காரை விட்டு மலைவாழ் மக்களிடம் தங்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார் . வீடு கட்டும் பணிகள் முடிவடையாததால் தாங்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றோம் என அமைச்சரிடம் தெரிவித்தனர் அமைச்சர் வனச்சாரகரிடம் விரைவாக பணிகள் முடித்துக் கொடுக்க உத்தரவு பிறப்பித்தார் மலைவாழ் மக்கள் பத்மாவதி கூறுகையில் கூமாட்டி, டாப்ஸ்லிப் எருமப்பாறை பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக வீடுகள் கட்டி வருகிறது இதனால் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மழைக்காலங்களில் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றோம் வீடுகள் விரைந்து கட்டி தர வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம் மேலும் எருமை பாறை பகுதியில் கடந்த பல வருடங்களாக மின் இணைப்புகள் இல்லை அதையும் நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர் .